Friday, May 3

சிவகுருநாதன், இரத்தினதுரை (கலாசூரி)

0

1931.10.07 ஆம் நாள் கந்தர்மடம் என்ற இடத்தில் பிறந்து கோண்டாவிலில் வாழ்ந்தவர். பத்திரிகைத்துறையில் என்றும் நீங்காத இடத்தினைப் பெற்ற இவர் கொமடோபிளேடன் விமானப் படைத்தளபதியாகப் பணியாற்றி அப்பதவியிலிருந்து விலகி 1955ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை யின் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார். இத்துறையின் ஆரம்ப காலத்தில் நாடாளுமன்ற நிருபராகப் பணியாற்றி நாடாளுமன்ற நிகழ்வுகளைப் பத்திரிகையில் வெளிக்கொண்டு வரும்முறை யினை ஏற்படுத்தினார். 1957 இல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி 1961ஆம் ஆண்டு முதல் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமனம் பெற்று 33 வருடங்கள் தேசியப் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய பெருமையினைப்பெற்ற ஒருவராவார். இக்காலப் பகுதியில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தலைவராகவும் இலங்கைப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகைச்சபை ஆகியவற்றில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பத்திரிகைப் பணியாற்றியதோடு இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டவரலாறு, சட்டமுறைமைகள், முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய இவருக்கு சிறந்த பத்திரிகையாளன் சேவைக்கான விருது, சமூகமாமதி, தமிழ்மணி போன்ற சிறப்பு விருதுகளும் இலங்கையின் அதிஉயர் விருதான கலாசூரி விருதும் வழங்கப்பட்டது. இவர் 2003.08.08 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!