யாழ்ப்பாணத்தவர் வாழ்வில் காலை மாலை உணவுகளில் ஒன்றாக இடியப்பம் இடம்பிடித்துள்ளது. இடியப்பம் அவிப்பதற்காக பனை நாரினால் செய்யப்பட்ட தட்டு பயன்படுத்தப்;படுகின்றது. சிவப்பரிசிமா மற்றும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் இவ் உணவாணது சிக்கல் குறைந்ததாகவும் விரைவான செரிமானமடையக் கூடியதாகவும் காணப்படுகின்றது.

