1901.06.18 ஆம் நாள் அம்பனை- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த உடுக்கு வாத்தியக் கலைஞர். காத்தவராயன் கூத்து ஏனைய நாட்டுக் கூத்துக்களுக்கும் உடுக்கினை வாசிப்பது மட்டுமல்லாமல் ஆலயத் திருவிழாக்களின்போது நடைபெறுகின்ற கலைப்பாடல்கள், காவடிப்பாடல்கள் என்பவற்றிற்கும் உடுக்கு வாசித்து சிறப்பித்தவர். 1995.12.09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.