Saturday, May 4

பொன்னுச்சாமி, தேசிகர் செல்லையா

0

1921.07.21 ஆம் நாள் தெல்லிப்பளை- கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்து இசை நாடகங்களுக்கான பின்னணி இசை வழங்குவதில் பெரும்பங்காற்றியவர். தந்தையாரால் தயாரிக்கப் பட்ட சிறுத்தொண்டர் நாடகத்தில் சீராளனாகப் பாத்திரமேற்று நடித்தவர். இருப்பினும் பிறவியிலேயே இசை வல்லமையுடையவராதலால் இசைக்கலையிலேயே அதிகம் நாட்டம் கொண்டவராகத் திகழ்ந்தார். ஆர்மோனிய வித்துவானாகவும், இராஜபார்ட் நடிகராகவும், நாடக பக்கப்பாட்டுக் காரராகவும் தமிழகத்தில் சில ஆண்டுகள் செயற்பட்டவர். மதுரை நாடக சபா உறுப்பினராகச் செயற்பட்டதுடன் காலத்துக்குக் காலம் கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு அழைக்கப்பட்டவர். 1948 இல் மதுரை நாடக சபா இவருக்கு தேசிகர் பட்டம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. டப்பாசெற், மணிக் கொம்பனி, யப்பான்செற் என காலத்துக்குக் காலம் தோன்றிய நாடக அமைப்புக்களில் தென் இந்திய நடிகர்களுடன் யாழ்ப்பாணத்து முதுபெரும் நாடகக் கலைஞர்களான அமரர்கள் சின்னையாதேசிகர்,மாசிலாமணி, நடிகமணி வீ.வீ. வைரமுத்து போன்றவர்களுடன் இணைந்து கூத்துமேடைகளை அலங்கரித்தவர். காலப்போக்கில் ஆர்மோனியம் வாசிப்பதனை மட்டும் தொழிலாகக் கொண்டார். நாடகங்கள் மட்டுமன்றி மெல்லிசை, இன்னிசை, சதுர்க்கச்சேரி என்பவற்றிற்கும் ஆர்மோனியம் வாசிப்பதிலும் தனித்துவம் பெற்றிருந்தவர். தந்தையாரால் எழுதப்பெற்ற யாழ்.நகர் கோரச்சிந்து, முக்கொலை, யுத்த முழக்கமும் ஊரவர்கலக் கமும், சூரசங்காரம், இராசமணியின் நேசம் போன்ற கவிதை நூல்களுக்கு இசையமைத்து உயிர் கொடுத்தவர். நடிகராகவும், பாடகராகவும், ஆர்மோனியக் கலைஞனாகவும் விளங்கிய இவர் புன்னைக்கோட்டை வாத்தியம் என்ற புதிய வாத்தியத்தினை ஈழத்துக் கலையுலகிற்கு அறிமுகம் செய்தவராக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991.01.22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!