மாட்டு வண்டில்ச் சவாரி ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக இவ்விளையாட்டு இருந்திருக்கின்றது. விவசாயிகள் தமது அறுவடைக் காலம் முடிவடைந்த வசந்த காலத்தில் தமது காளைகளைக் கொண்டு இப்போட்டிகளை நடத்தியுள்ளனர். மாடுகளை கையில் பிடித்தவாறு குறிப்பிட்ட தூரம் சவாரி செய்தல் இப்போட்டியின் அடிப்படையாகும்.மாடும் போட்டியாளரும் ஒழுங்கமைப்பாளரால் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கேற்ப போட்டியில் பங்கு கொள்வது இங்கு முக்கியமானதாகும். வயல்களில் நடைபெற்ற இவ்விளையாட்டானது காலப்போக்கில் திடல்களில் நடைபெற ஆரம்பித்தது. காலப்போக்கில் மாட்டு வண்டில்ச் சவாரிப்போட்டியாக மாற்றமடைந்தது.
