Sunday, May 5

போர்த்தேங்காய் அடித்தல்

0

தமழிர்களது பாரம்பரிய விளையாட்டுக்களில் பேகாரத்தேங்காய் அடித்தல் தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வரும் பண்பாட்டு விளையாட்டாகும். சித்திரை வருடப்பிறப்பினை முன்னிட்டு பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியிலும் சனசமூக நிலையங்கள் தோறும் நடத்தப்பட்டு வந்த இவ்விளையாட்டானது மனத்தையரியத்தினையும் உடல் பலத்தினையும் விளையாடுவோர் மனதில் ஏற்படுத்தி நிற்கும்.தற்காலங்களில் இவை அருகி ஞாபகத்திற்காக விளையாடும் விளையாட்டாக மாறிவிட்டமை கண்கூடு.

இவ்விளையாட்டில் ஈடுபடுவோர் இதற்கான காய்களை பல்வேறு இடங்களிலும் தேடி எடுத்து நீர் மற்றும் மணலில் பலநாள் பதப்படுத்தி  போரடிப்பதற்காக தம்மை தயார் செய்வர். போட்டியாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப  போர்க்காய்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதுடன் போட்டிகளானது காயை நிறுத்தி வைத்து அடித்தல் , காயை விட்டெறிந்து அடித்தல் என்னும் இருமுறைகளில் நடைபெறுவது வழக்கம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!