1938 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஓட்டுமடம் என்ற இடத்தில் பிறந்தவர்.யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நாடகப் பட்டப்பின் கற்கைநெறித் தகைமை பெற்றவர். அபத்த நாடக முறைமையை ஈழத்து தமிழ் நாடக வரலாற்றில் அறிமுகம் செய்தவர்.70 களின் பின்வந்த காத்திரமான நாடக நெறியாளர்களில் ஒருவர். நடிகர்களுக்கான குரற்பயிற்சியை நல்லமுறையில் வழங்கும் விசேடத்துவமுடையவர். நெறியாளர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பல்வகிபாகமுடைய இவர் விழிப்பு, அபசுரம் ஆகிய நாடகங்களை எழுதி அரங்கேற்றியதுடன் மகாகவியினது பாநாடகமான கடூழியம் என்ற நாடகத்தினை நெறிப்படுத்தியவர். 2005.03.03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.