Wednesday, January 15

உரோமகேஸ்வரன், பூரணபசுபதிப்பிள்ளை (வைத்திய கலாநிதி)

0

யாழ்ப்பாணம் வலிகாமம் சுதுமலைக் கிராமத்தில் நீண்ட வரலாறு கொண்ட ஆயுள்வேத வைத்தியர் மரபில் (வைத்தியர் நந்தீஸ்வரர், வைத்தியர் சுப்பிரமணியம், வைத்தியர் நாகப்பர், வைத்தியர் ஆறுமுகம், வைத்தியர் நாகலிங்கம்பிள்ளை, வைத்தியர் பூரணபசுபதிப்பிள்ளை) 7ஆவது பரம்பரையில் 1938-11-20 ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயத்திலும் பின் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும் கற்றதுடன் தரம் 5 முதல் உயர்தரம் வரை யாழ்ப்பாணம் சென். Nஐhன்ஸ் கல்லூரியிலும் கற்றல் புலத்தினைத் தொடர்ந்தார். 1960 – 1961 வரை தமிழகத்தில் திருச்சி சென்.ஜோசெப்ஸ் கல்லூரியில் சமூக சேவைக்கான டிப்ளோமாக் கல்வியையும் முன் பல்கலைக்கழக கற்கையையும் நிறைவுசெய்து, மதுரைப் பல்கலைக்கழகத்தில் 1963 இல் விஞ்ஞான இளமாணிப்பட்டத்தை நிறைவு செய்து, தாவரவியலில் சிறப்பு விஞ்ஞானப் பட்டதாரியாக 1964 இல் தாயகம் மீண்டார். 1966இல் கொழும்பு அரசினர் ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியில் 6 வருடங்கள் பயின்று ஆயுள்வேத வைத்திய பட்டதாரியாக 1971 ஆம் ஆண்டு வெளியேறி சித்தவைத்திய பணியைத் தொடரலானார். வடக்குக் கிழக்கு மாகாணத்தின் சுதேச மருத்துவத்துறை பணிப்பாளராக பணியேற்று வாழும் நாள்களில் உருவாக்கிய செயற்றிட்டங்களின் அடிப்படையிலேயே இத்துறையின் மாகாண அபிவிருத்திப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. 50 ஆண்டுகளைக் கொண்ட அவரது வைத்தியப் பணியில் அறிவுக்களஞ்சியமாக நடமாடினார். 1971 இல் சுதுமலையில் உள்ள தனது இல்லத்தில் ஆயுள்வேத வைத்திய நிலைய மொன்றை ஆரம்பித்து மக்கள் பணியாற்றினார். லங்கா ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியில் 1978 – 1988 வரை விரிவுரையாளராகவும்,1988 – 1991 வரை அதிபராகவும் கடமையேற்று கல்லூரிச் சமூகத்திற்கும், பல வைத்திய மாணவர்களின் வளர்ச்சிக்கும் அரும் பணியாற்றினார். வடக்கு கிழக்கு மாகாணத்தின் சுதேச மருத்துவ மாகாணப் பணிப்பாளராக 1991 முதல் 1998 வரை மக்கள் சேவையாற்றிய காலத்தில் சுதேச மருத்துவத்தின் வளர்ச்சிக்கு ஏணியாகத் திகழ்ந்தார். 2002 இல் இலங்கை அரசின், சுதேசமருத்துவம், போஷாக்கு அமைச்சினால் சகஸ்றாபிN~க வைத்தியசூரி என்னும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்காக சித்தமருத்துவத்துறையில் இருந்து முதல் முதலில் தெரிவுசெய்யப்பட்ட இவர் 2005 முதல் 2008 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூதவை உறுப்பினராக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளோடு தன்னையும் இணைத்துக் கொண்டார். ஆயுள்வேத வைத்திய சபையின் பரீட்சைகள் பிரிவின் ஓர் அங்கத்தவராக இருந்து ஆயுள்வேத வைத்தியர்களைப் பதிவு செய்வதில் முக்கிய பங்காற்றினார். பின்னைய காலத்தில் சித்தமருத்துவத் துறையின் பேரவை உறுப்பினராக அளப்பரிய பணிசெய்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்தமருத்துவத்துறையின் வருகை விரிவுரையாளராக இருந்து பல சித்தவைத்தியர் களின் உருவாக் கத்திற்கு உந்துசக்தியானார். தகுதி அடிப்படையில் ஓர் அங்கத்தவராக அபின் சபையிலும், வடமாகாண புற்றுநோய் – எயிட்ஸ் நோய்த் தடுப்புச் சங்கத்திலும் அங்கத்துவம் வகித்துப் பணியாற்றிய இவர் 2015 ஆவணி 28 ஆம் நாள் பூர்வ சதுர்த்தசி திதியில் தன் 77 ஆவது அகவையில் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!