Thursday, May 2

முருகேசு,சண்முகம்,விஸ்வநாதர்

0

விளானை,களபூமி,காரைநகரில் விஸ்வநாதர் பார்வதி தம்பதியர்க்கு மகனாக 1923.12.23 இல் பிறந்த வர். வர்த்தகத் துறையில் தனது அயராத உழைப்பினால் பாரினில் உயர்ந்து வர்த்தகத் துறைக்கே பெருமை சேர்த்தவர்.பாடசாலைப் படிப்பினை முடித்துக்கொண்ட இவர் 1940 களில் வடமராட்சியின் நெல்லியடியில் கால்கோள் விழாவாக தனது வியாபாரத்தினை ஆரம்பித்தார்.அதனுடைய தொடர்ச்சியாக கிளிநொச்சி மருதநகர் நான்காம் வாய்க்காலில் 1950 களில் முருகன் என்றபெயரில் அரிசி ஆலையினை ஆரம்பித்தார். அரிசி ஆலையின் வளர்ச்சி அவரை ஓர் பல்வர்த்தக கூட்டு முயற்சியாளனாக மாற்றுவதற்கான களநிலைமைகளை ஏற்படுத்தி நின்றது. அதன் வெளிப்பாடாகவே யாழ்ப்பாணத்தில் 1960களில் ச.வி.முருகேசு என்னும் வியாபார நாமத்தினை உலகமெங்கும் பரவும் வகைகண்டார். எஸ்.வி.எம் வியாபார நிறுவனம் உதயமானது. வர்த்தக முதல்வரானார். 1986களில் கொழும்பு தலைநகரில் எஸ்.வி.எம். டாம் வீதியில் வியாபாரப் பணிமனையை ஆரம்பித்து தனது நேரிய உழைப்பினால் நிகரற்ற வெற்றிகளைச் சேர்த்தார். நீளநினைப்பதற்குரிய வர்த்தகத்துறை வள்ளலானார். பாரிய சேவையை பாரெங்கும் பரவினார். வெள்ளவத்தையில் சுப்பர் மார்க்கட் ஆரம்பித்தார். உவப்புடன் உலகம் வியந்திட உயர்வுகள் கண்டார். சமய, சமூக நிறுவனங்களை ஆதரவுக்கரம் கொடுத்து பாதுகாப்பதிலும்,அன்னதான மடங்களுக்கு தேவையான நிதியுதவிகள் மட்டுமன்றி பொருளுதவிகளை வழங்கியதோடு பல்வேறு சமூக நிறுவனங்களுக்கும் தனது நிதியிலான பங்களிப்பினை வழங்கி ஊக்குவித்த பெருந்தகையாளன் 2.10.08.16ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!