Sunday, May 5

அமெரிக்கன் இலங்கை மிஷன் தேவாலயம்  – தெல்லிப்பளை

0

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் காணப்படும் தேவாலயமும் அதனருகில் காணப்படும் குருமனையுமே அமெரிக்கன் மிஷன் தொண்டர்களுடைய முதலாவது தலைமைப் பணிக்களமாகும்.அமெரிக்கன் மிஷன்தொண்டர்களில் முதன்முதலில் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தவர் சாமுவேல் நியூவெல் என்பவராவார். நீண்ட கடற் பயணத்தில் தன்னுடைய மனைவியையும் பிறந்த குழந்தையையும் பறிகொடுத்த இவர்1813-02-24 இல் கொழும்பை வந்தடைந்தார். 1813-09-07 இல் யாழ்ப்பாணம் வந்த இவர் 1813-09-08 இல் தெல்லிப்பளையில் தற்போது தேவாலயம்இருக்கும் மி~ன் வளாகத்தில் காலடி எடுத்துவைத்து இறைபணிக்கான இடங்களைத்தேடினர்  .இவருடைய பரிந்துரையின் பயனாகவே அமெரிக்கன் மி~ன் சங்கம் தனது முதலாவது தொண்டர் அணியினை 1816 இல் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியது. தெல்லிப்பளை அமெரிக்கன் மி~ன் தேவாலயம் போர்த்துக்கேயர் காலத்தில் (1505 – 1656 ) கட்டப்பட்டது. 1602 ஆம் ஆண்டில் 34 தேவாலயங்கள் யாழ்.குடா நாட்டில் கட்டப்பட்டன என்றும் தெலிப்போலே (வுநடipழடந) என்னுமிடத்தில் ஆலயமொன்றும் அதற்கருகில் நாடகமேடையொன்றும் கட்டப்பட்டதாகவும் யேசு சபையினருடைய அறிக்கை கூறுகின்றது. போர்த்துக்கேயர் இலங்கையை விட்டு நீங்கிய பின்னர் ஒல்லாந்தருடைய ஆட்சியில் 1661 ஆம் ஆண்டில் பல்தேயஸ் என்னும் ஒல்லாந்த மதகுரு இம்மி~ன் வளாகத்திலிருந்து பணியாற்றியுள்ளார். அவர் இவ்விடத்தை விட்டு 1665 இல் வெளியேறியவேளையில் அவரால் உருவாக்கப்பட்ட பாடசாலையில் 1000 பிள்ளைகள் படித்தனர். இவர்களில் 30 பேர் கிறிஸ்தவர்களாக இருந்தனர். இப்பகுதியில் 8 வருடங்களாக தேவஊழியம் செய்து கொண்டிருந்த வண.பாம் பாதிரியார் கொழும்பு சென்ற காலத்தில்1813 இல் அழிவுற்றிருந்த தேவாலயத்தினையும் வீட்டினையும் நியூவெல் பொறுப்பேற்றார். 1816 ஆம் ஆண்டு அமெரிக்கன் மிஷன் சங்கம் யாழ்ப்பாணத்துக்கென அனுப்பிய 07 மிஷன் தொண்டர்களில் வண. கலாநிதி டானியல் பூவர் குடும்பமும், வண எட்வேட் ஹொறனும் இப்பகுதியில் குடியேறினர் .டானியல் பூவரவர்களால் இப்பகுதியில் ஒரு ஆங்கிலப் பாடசாலையும் ஒரு சுதேசப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.இதுவே இன்றைய யூனியன் கல்லூரியாகும். 1816 முதல் தெல்லிப்பளை, வட்டுக் கோட்டை, பண்டத்தரிப்பு, மானிப்பாய், உடுவில் ஆகிய 5 திருச்சபைகளும் ஒன்றாகவே இயங்கி வந்தன. 1831 முதல் இத்திருச்சபைகள் தனித்து இயங்கத் தொடங்கின. இவ்வளாகத்தில் திருமதி டானியல் பூவர் அவர்களால் ஒரு பெண் விடுதிப் பாடசாலை 1819 ஆம் ஆண்டு 8 பெண் பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1820-08-10 இல் வண.ஜேம்ஸ் கரட் அவர்களால் அச்சு இயந்திரம் கொண்டு வரப்பட்டு முதலில் இங்கு வைத்தே இயக்கப்பட்டது. இத்தகைய துறை சார்ந்த வளர்ச்சிப்போக்குக் காலத்தில் இவ்வாலயமும், பாடசாலையும் தீ வைத்து எரிக்கப்பட்டது. தெல்லிப்பளை ஸ்தான மிஷன் தொண்டராகவிருந்த வண. குவிக் அவர்களால் வடக்குத் தெற்காக இருந்து எரிந்த ஒல்லாந்தரது ஆலயத்தை கிழக்கு மேற்காகக் கட்டி 1867-08-28 இல் மீளப் பிரதிஸ்டை செய்யப்பட்டது. 1908 இல் பெரிதாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1915 இல் நிறைவு பெற்றன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!