பருத்தித்துறை நகர்ப்பகுதியில் மெதடிஸ்த திருச்சபையினர் (வெஸ்லியன்) தேவாலயத்தினையும் பாடசாலையையும் அமைத்து தமது மதத்தினை வளர்த்தனர். 1822ஆம் ஆண்டில் பருத்தித்துறையில் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றைக் கட்டினர். 1823இல் இன்றைய மெதடிஸ்த பெண்கள் பாடசாலை இருக்கும் இடத்தில் ஒரு பாடசாலையை நிறுவி கிறிஸ்தவத்தினையும், ஆங்கிலத்தினையும் முதன்மைப்படுத்தி ஏனைய பாடங்களுடன் கற்பித்தனர்.1838 ஆம் ஆண்டில் மெதடிஸ்த தேவாலய மண்டபம் இருந்த இடத்தில் ஆண் களுக்கென தனிப்பாடசாலை உருவாகியது. இதனால் தேவாலயம் ஒன்றை இப்பாடசாலைக்கு முன்னால் புதிதாகக் கட்டினார். இது லு.ஆ.ஊ.யு ர்யடட என அழைக்கப்பட்டது. இப்பழமை வாய்ந்த சுண்ணாம்புக் கட்டடம் 1960களில் வீசிய சூறாவளியில் தாக்குப் பிடிக்காமல் போக வடக்காக தற்போதைய தேவாலயத்தினைக் கட்டினர்.