மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான இவ்வாலயம் ஆரம்பகால மன்னராட்சிக் காலத்தில் போர்வீரர்களாக இருந்த கரையோரப் பிரதேச மக்களில் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீன்பிடித்தொழில் செய்யும் நோக்கோடு இப்பிரதேசத்திற்கு வருகைதந்து 1800 ஆம் ஆண்டு சிறுகுடில் அமைத்து சொரூபம் வைத்து வணங்கி வந்தனர். 1867 இல் யாஸ்திரிகர் தலமாக அறிவிக்கப்பட்டது.தற்பொழுது வர்த்தமானிப் பிரசுராலயமாக மிளிர்கின்றது. வருடந்தோறும் ஆடி மாதம் 02 ஆம் திகதி மடுப்பெருநாள் முடிவடைந்ததும் தொடர்ந்து 08 ஆம் திகதி இவ்வாலயத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதாயினும் தை மாதத்தில் விழா நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.