1939-03-07 ஆம் நாள் சிந்துபுரம் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். நாட்டுக்கூத்து, கிராமியக் கலை, எழுத்தாக்கம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், அநுமனாட்டம் போன்றகலைகளில் சிறந்து விளங்கினாலும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவினது வடமோடிக் கூத்துக்களில் வீமன் பாத்திரமேற்று பல தடவைகள் நடித்து அப்பாத்திரத்தினைச் சிறப்பித்த பெருமை பெற்றதனால் “வீமன் நாகப்பு” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படலானார். இவரது உடலமைப்பு நடிப்பு என்பன வீமன் பாத்திரத்தினை சபையோரின் மனக்கண்ணில் நிலைநிறுத்தியமை கண்கூடு. பிற்காலத்தில் பொம்மைகள் உருவாக்குதல் அதற்கான ஆடல்களைப் பயிற்றுவித்தல் என்கின்ற வழியில் தனது கலைப் பயணத்தினைச் செலுத்தி யமை மட்டுமல்லாது தனது புதல்வர்களான நா.மணிவண்ணன், நா.மீனேஸ் ஆகியவர் களை இத்துறையில் பயிற்றுவித்து தனது கலைவரலாற்றுத் தொடர்ச்சியினை எற்படுத் தியிருப்பது இவரது சிறப்பம்சமாகும். இவரது கலைச்சேவைகளைப் பாராட்டி கலாபூஷணம், கலைவாருதி போன்ற உயர் விருதுகள் வழங்கப்பெற்றவர். மேலும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து தொடர்பில் இவரால் ஆக்கி வலிகாமம் மேற்கு கலாசாரப் பேரவையினரால் வெளியிடப்பட்ட நூல் இவரது கலை ஆளுமையின் ஆழத்தை எடுத்துக்காட்டி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. 2012-09-18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.