Sunday, October 6

ஐயாத்துரை, முத்தையா

0

1903.11.16 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி மட்டுவில் என்ற இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். கவிதை, நாடகம், கரகம், காவடி ஆகிய கலைகளில் நிபுணராக ஈடுபட்டவராயினும் கரகாட்டக்கலையிலேயே மிகவும் பெயர் பெற்றவர். அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். இதனால் அம்மனின் அருளாசியினையும் பெற்றவர். மாவைக் கந்தனுடைய ஆலயத்தில் காவடி, கரகம் ஆகிய கலைகளை நேர்த்திக்கடன் நிறைவேற்று வோருக்காகப் பழக்குவதும், ஆடவைப்பதற்குமான அண்ணாவியாராகவும் செயற்பட்டவர். இத்தகைய செயற்பாடு களை தமிழருவி சண்முக சுந்தரம் அவர்கள் வியந்து பாராட்டி விமர்சனக் குறிப்புகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏணியில் நின்று கரகம் ஆடுவதும், கயிற்றினில் நின்று காவடி ஆடுவதும், தோளில் இருக்கும் காவடியினைக் கைவிட்டு ஆடுவதும் இவருக்குக் கைவந்த கலை. கூர்முனைக் கத்தியாட்டத் திலகம், கரகாட்டத்திலகம் போன்ற விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டவர். 1979.12.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!