தெணியம்பை,வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா அனந்தராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட அனந்தராஜ் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி நடராஜா குணலட்சுமி தம்பதிகளுக்கு சிரேஸ்ட புதல்வனாகப் பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும்,பின்னர் உயர்தரக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,கொழும்பு பல்கலைக் கழகங்களில் பட்டப்; படிப்பையும்,பட்டப் பின்படிப்பையும் மேற்கொண்டார். கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் சரணிய இயக்கம், கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபாடு காட்டியதால் சாரணியத்தில் உயர் விருதான இராணிச் சாரணர் விருதையும் பெற்றுக் கொண்டார்.
ஆனந்தி, வல்வை.ந.அனந்தராஜ் என்ற புனை பெயர்களில் 45 வருடங்களுக்கு மேலாக எழுதி வருகி;ன்றார் கல்வி,, பொருளாதார அபிவிருத்தி, சுய வேலை வாய்ப்பு, பயன்தரு பொழுது போக்கு, கலை, இலக்கியம், கலாசாரம், விளையாட்டுத்துறை என்பவற்றின் ஊடாக மக்களை நிம்மதியானதும் சமாதானம்மிக்கதுமான சூழலில் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் ஆற்றலுள்ள இளம் சமுதாயத்தை உருவாக்குதல். ஏன்ற இலக்கைக் கொண்டு தனது இலக்கிய முயற்சிகளையும், பொதுச் சேவையையும் முன்னெடுத்து வருகின்றார்.
இவரது கல்வித் தகைமைகள்
- A.(Hons) 2nd class
- A. in Communication (2nd Class)
தொழில்; தகைமைகள் :
- பட்டப்பின் கல்வி டிப்ளோமா,((Dip-In-Edu.)
- இதழியல் டிப்ளோமா ((Gold medal award)
- இலங்கை அகிபர் சேவை (SLPS)
- இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) தனது 22 ஆவது வயதில் ஆசிரியர் சேசைக்குள் உள்வாங்கப்பட்டபோது முதன் முதலாக ஊவா மாகாணத்தில் உள்ள அப்பு;த்தளை தமிழ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்பு;ததளையில் கற்பித்து;க கொண்டிருந்த பொழுது தொழில் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டதுடன் தோட்ட்த தொழிலாளர்கள் படுகின்ற அவலங்களை நேரடியாகவே அனுபவித்ததால். ஆவர்களது வாழ்ககைiயின் பல்வேறு பரிமாணங்களை அனுபவ ரீதியாக உணர்ந்ததால் அந்த மக்களின் வாழ்க்ககையின் துயரங்களைச் சிறுகதைகளாகவும் ,கவிதைகளாகவும் எழுதுp வநடதால் அந்த வகையில் “சுமையின் விளிம்பில்” என்ற சிறுகதை தினகரன் வார மஞ்சரியில் பிரசுரமானதைத் தொடர்ந்து கலை இலக்கியத்அதுறைக்குள் உள்வாங்கப் பட்டார். இவற்றை விட கல்வி,முகாமைத்துவம், நாட்டார் பாடல்,,போரில் மக்களின் அவலங்களின் அனுபவங்கள்,ஆன்மீகம்,நூலக அபிவிரு;ததி, கல்வி போன்ற 25 நூல்களை எழுதி வெளியிடடு;ளளார்
இவரது கலை,இலக்கியச் சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் இலங்கைக் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் “கலாபூஷணம்” என்ற உயர் விருது வழங்கி;க் கௌரவிக்கப்பட்டவர்.
இவரது அரச சேவைக் காலம்:
- ஆசிரியர் சேவையில் 9 வருடங்கள்
- அதிபர் சேவையில் (ளுடுPளு-1) -14 வருடங்கள் (22.04.1982 – 12.06.1996)
- முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிமனையின்; திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளராக 1 வருடம்
- வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆய்வு அபிவிருத்திப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக 2 வருடங்கள்
- வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள பாடசாலை நூலக அபிவிருத்திக்குப் பொறுப்பான பணிப்பாளராகவும் தமிழ்மொழிப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் 5 வருடங்கள்; கடமையாற்றினார்
- கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஊடகத்துறை வருகை விரிவுரையாளாரக 5 வருடங்கள்
- வடமாகாண பாடசாலை முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான உலக வங்கியின் நிபுணத்துவ ஆலோசகராக (World Bank Consultant) 3 வருடங்கள்
- யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஊடகத்துறையிலான வருகை விரிவுரையாளராக 2015 ஒக்ரோபர் மாதத்தில் இருந்து 2017 வரை
- ஆறுதல் நிறுவனத்தில் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான நிபுணத்துவ ஆலோசகராக 01.08.2015 இல் இருந்து 2017 வரை
- கல்வி அமைச்சின் அமைச்சருடைய பிரத்தியேகச் செயலாளராக யூலை’ 2017- ஒக்ரோபர்’2018 வரை கடமையாற்றியமை.
வெளிநாட்டு புலமைப் பரிசில் பயிற்சிகளுக்காகச் சென்று கற்றலில் ஈடுபட்ட அனுபவங்கள்
- வாசிப்புத் திறன்;விருத்தி தகைமைமைச் சான்றிதழ் பயிற்சி – நியுசிலாந்து
- நூலகமும் தகவல் தொழில் நுட்பமும் பயிற்சி – கனடா
- முகாமைத்துவ தகவல் திறன் பயிற்சி – பஞ்சாப் பல்கலைக் கழகம் ,இந்தியா
- முகாமைத்துவ விருத்திப் பயிற்சி – இலண்டன்
- தகவல் தொடர்பாடல் பயிற்சி- தாய்லாந்து
- சமாதானப் பேச்சு வார்த்தைகளில் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் – ஜேர்மனி
இலக்கிய முயற்சிகள் :
இவரது நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இலாங்கையின் முன்னணிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டதால் இலக்கிய உலகில் தடம் பதித்தார். இவரால் வெளியிடப்பட்ட நூல்கள், மற்றும் சிறுகதைகள், விவரணக் கட்டுரைகள்
- வல்வைக் கப்பலின் அமெரிக்கப் பயணம்- 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 வது உலகத் தமிழாராயச்சி மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட நூல்
- மண்ணும் மனிதனும் (தினகரன் தொடர் கதை) -1976
- வல்வைப் படுகொலைகள் -(தமிழில்) -1989
- India’s Mylai – Valvettiturai Massacre (ஆங்கிலத்தில்) -1989
- வல்வைப் புயல் (உதயன் விவரணச் சித்திரம் தொடர்)-1990
- அறிவியல் உண்மைகள் (இரண்டு பதிப்புக்கள்) -1993
- உதிரம் உறைந்த மண் விவரணச் சித்திரம்) -1997
- பொது விவேகம் (கல்வி அமைச்சு வெளியீடு)-1998
- முகாமைத்துவ நுட்பங்கள்(4பதிப்புக்கள்)ஆளுநர் விருது பெற்ற நூல்-1998
- ஆரம்பக் கல்வி ஆய்வு -1998
- சந்நிதிச் செல்வம் (இரண்டு பதிப்புக்கள்)-2001
- வடபுல நாட்டார் வழக்கு (இரண்டு பதிப்புக்கள்) -2002
- பாதசரம் – சிறுகதைத் தொகுதி-சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பரிசு பெற்ற சிறுகதைகள் – 2002
- ஈழத்து இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்(ஆய்வு நூல்)-2003
- நீரலைகள் (குறு நாவல்) -2003
- முகாமைத்துவத்தில் பகிரங்கப்படுத்தல் -விளக்கு சஞ்சிகையின் தொடர் கட்டுரை -2005
- தேசியத்தை நோக்கிய கல்வி – 2005
- கூழ் நியாயங்கள் (பாரிஸ்ரர் கூழின் கதை)-2005
- பாடசாலை முகாமைத்துவம் -(குமரன் வெளியீடு)- 2006
- நூலக அபிவிருத்தி முகாமைத்துவம் – 2014
- சமர் கண்ட முல்லைத்தீவு (இகுருவி வெளியீடு)- 2015
- வல்வைப் புயல் (இகுருவி வெளியீடு)- 2015
- கல்வியியல் நிர்வாக முறைமைகள் – 2016
- அறிவியல் உண்மைகள் -திருத்திய படங்களுடனான பதிப்பு-ஆறுதல் வெளியீடு-2017
- வல்வையின் முதுசொம்(வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் வெளியீடு -2017
- 5-ளு முகாமைத்துவம் (உதயன்,சுடரொளி தொடர் கட்டுரை)
- உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி: நேற்று-இன்று-நாளை -2018
இவற்றை விட ஊடகத்துறை தொடர்பாகவும், கல்வி அபிவிருத்தி, முகாமைத்துவம் மற்றும் நூலக அபிவிருத்தி தொடர்பாகவும் பல கட்டுரைகள் அவ்வப்போது ஈழத்துத் தினசரிகள், சஞ்சிகைகளில் வெளிவந்தன.
கலைத்துறையில்:
வல்வை கெலியன்ஸ் நண்பர்கள் நாடக மன்றத்தினால் பல இடங்களில் மேடையேற்றப்பட்ட ”சூரபத்மன்” நாடகத்தில் பிரகஸ்பதியாகவும, இலட்சியவீரன் நாடகத்தில் மந்திரியாகவும், புரட்சித் தலைவராகவும் இரட்டை வேடத்தில் நடித்தும், “பாலூட்டுவது யார்” சமுக நாடகத்தில் தந்தையாகவும் நடித்து மேலும் பல நாடகங்களிலும் நடித்துப் பாராட்டுக்களைப் பெற்றமை.
பெற்றவிருதுகள் :
- இராணிச் சாரணருக்கான விருதையும் மாட்சிமை தங்கிய மகாராணியின் சான்றிதழையும் மகாதேசாதிபதி வில்லியம் கோபல்லாவிடம் இருந்து பெற்றமை
- கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஊடகக் கல்வி பட்டப் பின்படிப்புத் தேர்வில் சிறந்த பெறுபேற்றுக்காக தங்கப்பதக்கம் பெற்றமை.
- ‘சுடர்’ சஞ்சிகையில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்த சிறுகதைக்கான பரிசை“ அந்தச் சுவடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன” என்ற சிறுகதைக்காக 1972 இல்
- விளக்கு சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் இடம் பெற்றமை.”பிறந்த நாள் பரிசு” (1995)
- யாழ் இலக்கிய வட்டமும் ,தினக்குரலும் இணைந்து நாடளாவிய ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமை – “பாதசரம்” சிறுகதை (1998)
- அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கம் அனைத்துலக ரீதியில் நடத்திய சிறுகதை போட்டியில் அடுத்து இருவருடங்கள் தொடர்ச்சியாக முதல் பரிசைப் பெற்றமை “ஒரு பிடி அரிசி” (1999 இல்) “ கானல் நீர்” (2000),
- முகாமைத்துவ நுட்பங்கள்’ என்ற முகாமைத்துவம் தொடர்பான நூலுக்கு சிறந்த நூலுக்கான வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய விருது – 1999
- அழகிய கண்ணே இலக்கிய விருது-1994 இல்
- வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தினால் 2011இல் வழங்கப்ட்ட “ கலைப்பரிதி”விருது
- வடமாகாண முதலமைச்சரின் கலை,இலக்கியத் துறைக்கான முதலமைச்சர் விருது- 2015
- கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட கலாபூசணம் விருது – 2015
- வல்வை கலை இலக்கிய மன்றத்தினரால் வழங்கப்பட்ட “கலைச் சிகரம்” விருது-2016
- நல்லூரில் வழங்கப்பட்ட “சமுகச் சிகரம்” விருது -2018.