1935.10.22 ஆம் நாள் அம்பலவாணர் வீதி, மருதனார்மடம், உடுவில் என்னும் இடத்தில் பிறந்த இவர் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராகக் கடமையாற்றிவர். மௌனகுரு கடவுள் சுவாமிகளின் முதன்மை பெற்ற சிஷ்யையாவார். கடவுள் சுவாமிகளின் அருட்பாதங்களைச் சரணடைந்து அவர் ஆற்றிய நற்காரியங்களுக்கு அவருடன் ஒன்றிணைந்து அயராது உழைத்தார். மறவன்புலோவில் அமைந்திருக்கும் குருநாதரின் குருவின் சமாதியில் குருபூசைகள் மற்றும் வழிபாடுகளில் கலந்து தனது குருநாதரின் நல்லாசிகளைப் பெற்றார். கடவுள் சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் அம்மையாருக்கு உரைத்த அருள்வாக்கின் பிரகாரம் கடவுள் சந்நிதி உருவானது. “உன்னுடைய இல்லிடம் ஒருகாலத்தில் அடியவர்கள் வருகைதந்து தபஜெப தியானங்களில் ஈடுபடும் அருள் நிலையமாக விளங்கும்” என்ற அருள் வாக்கிற்கமைய கடவுள் சந்நிதி என்ற திருநாமம் பெற்று மாதாஜி அவர்களுடைய இல்லம் திகழ்கின்றது. 2011.10.10 ஆம் நாள் சமாதியடைந்தார்.