சின்னத்தம்பி என்னும் இயற்பெயருடைய இவர் வடமராட்சி- தும்பளை என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சார்ஜனாகக் கடமையாற்றியவர். இதனால் அவர் தனது குடும்பத்தாரு டன் கந்தர்மடம் ஆத்திசூடி ஒழுங்கையில் வாழ்ந்து வந்தார். ஈழத்து முதற் சித்தர் என அழைக்கப்படும் கடையிற் சுவாமிகளை அவரது ஆன்மீகத் தன்மையினை அறியாது விசரர் எனப்பிடித்து சிறையிலடைத்தனர். அடுத்தநாள் அவரை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்காக சிறைக்கத வினைத் திறந்த வேளையில் அவர் அங்கில்லாமல் யாழ்ப்பாணம் பெரியகடையில் உலாவிக் கொண்டிருந்தார். இக்காட்சி யினைக் கண்டுகொண்ட சார்ஜன் சின்னத்தம்பி அவர்களது மனதில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியது. அன்று முதல் தனது இல்லக் கடமைகளுடன் கடையிற் சுவாமிகளிடம் பக்திபூண்டு அவர் வழிநடத்தலில் ஆன்மீகத்தேடலில் விழைந்தார். இருந்தபோதிலும் இவருடைய குருவாக சுவாமி சின்மயானந்தரையே குறிப்பிடுகின்ற னர். இவ்வழியில் இவர் சென்றதால் சார்ஜன் சுவாமிகள் என்று அழைக்கப்படலானார். தத்துவாசாரத்திலும் சமய அறிவிலும் மேம்பட்டவராக விளங்கிய இவர் 1904 ஆம் ஆண்டளவில் தற்பொழுது மடம் அமைந்திருக்கும் இடத்தில் சிறுகொட்டிலமைத்து ஆன்மீக வழிநடத்தலை செய்து வந்தார்.இதனால் இக்குரு பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக கடையிற்சுவாமிகளையும் இரண்டாவது பீடாதிபதியாக இவரையும் கொள்ளப்படுவது வழக்கம். கனகரத்தினம் சுவாமிகளுடைய ஞானகுருவான இவர் 1908-03-29 ஆம் நாள் சதய நட்சத்திரத்தில் பரிபூரணமடைந்து இவரது சமாதி நடுகல் கோம்பயன்மணல் மயானத்தில் சமாதியின் மேலுள்ளமையைக் காணலாம்.