1925 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் பிறந்தவர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் அதிபராய் இருந்த போதிலும் படைப்பிலக்கியம், பௌராணிகர், இசை, நாடகம், சொல்லாடல், கிராமியக் கலைகள் என்பவற்;றுடன் தலை சிறந்த இலக்கிய கர்த்தாவாகவும் திகழ்ந்துள்ளார். பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஆகியோரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இலங்கைக் கலைக் கழகத்தின் தமிழ் நாடகக்குழு உறுப்பினாராயிருந்து கலைப் பணியாற்றியவர். நாடகம், நாவல், வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய பல்துறைப் படைப்புக்களைத் தந்துள்ளார். வாழ்வுபெற்ற வல்லி (1962), பூதத்தம்பி (1964), இறுதி மூச்சு (1965) முதலிய நாடக நூல்களின் ஆசிரியர். 1974 இல் வெளிவந்த மீனாட்சி என்ற நாவலும்,பேராசிரியர் கணபதிப்;பிள்ளை என்னும் நூலும், பேராசிரியர் சு.வித்தியானந்தன் பற்றிய கலை மகிழ்நன் (1984), நூலும், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றிய சிவத்தமிழ்ச்செல்வம் (1925) போன்ற நூலும் ஈழத்து இலக்கிய வரலாற்றிற்கு வளம் சேர்ப்பனவாகும். சமூக நோக்குடைய பலபக்தி இலக்கியங்களையும் படைத்துள்ளார். வெற்றிலை மான்மியம், ஈழத்துச்சித்தர் சிந்தனை விருந்து (1984), காகப் பிள்ளையார் மான்மியம் (1983)சிவத்தமிழ்ச் செல்வம், யாழ்ப்பாணத்து இசைவேளாளர் பற்றிய நூல்களான கலையும் மரபும், இசையும் மரபும் (1974),குருவிச்சி நாய்ச்சி சலிப்பு, கண்ணகி அம்மன் கஞ்சிவார்ப்புத் தண்டற்பாட்டு, யாழ்ப்பாணத்து வீரசைவர், இறங்கணியவளை குருநாதர் மான்மியம், வள்ளி திருமணவேட்டைப் பாடல் நூல், மாவை முருகன் காவடிப்பாட்டு, மழை இரங்கிப் பாடல்த் தொகுப்பு, வன்னி வளநாட்டுக் கூத்து மரபு,முருகனைப் பூசிக்க அருமறைக் கல்வி, சிவனே போற்றி குகனே போற்றி யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற மாட்டுவண்டில் சவாரியின் வரலாற்றினை வெளிப்படுத்துகின்ற யாழ்ப்பாணத்து மாட்டு வண்டிற்சவாரி தொடர்பிலான வரலாற்றுப்பதிவினை யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிற் சவாரி போன்ற இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட வர். பல இளம் இலக்கிய கருத்தாக்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. தசம் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தமிழருவி த.சண்முகசுந்தரம் ஆசிரியரவர்கள் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் வாழ்ந்து இயற்கை எய்தினார்.