1922-05-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் சித்த வைத்தியத்துறையில் செங்கண்மாரி நோயைக் குணப்படுத்துவதில் மிகச் சிறந்த வைத்தியர் என்ற பெயர் பெற்றவர். யாழ்ப்பாணம் மட்டுமன்றி இலங்கைத் திருநாட்டின் சகல பாகங்களிலுமிருந்து நோயாளர்கள் தேடிவந்து சிகிச்சை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும். 2004-10-17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.