1898 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி தெற்கு கட்டுவன் என்ற இடத்தில் பிறந்தவர். கிராமியக் கலைகளான வசந்தனாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளின் மிருதங்க வித்து வானாகவும், பின்னணிப்பாடகராகவும் பணியாற்றி கலையை வழி நடத்தி வந்தவர். இவரது மிருதங்க வாசிப்புத் திறமையால் மத்தள முருகேசு என அழைக்கப்பட்டவர். 1953 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன ஆதரவுடன் கொழும்பில் இடம்பெற்ற வசந்தனாட்டத்திற்குப் பின்னணிப் பாடகராகவும் மிருதங்க வித்துவானாகவும் கலையின் பெருமையை வெளிப்படுத்தியிருந்தவர். கலையின் மீது இவர் கொண்ட திறமையை கௌரவிப்பதற்காக 1982இல் குரும்பசிட்டி பொன்பரமானந்த வித்தியாசாலை யில் வலிகாமம் வடக்கு கிராம முன்னேற்றச் சங்கத்தினரால் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான அமரர் அமிர்தலிங்கமவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பெற்றவர். கிராமியக் கலைகளிற்கு தொடர்ச்சியான தனது பங்களிப்பினை வழங்கிய முருகேசு அவர்கள் 1984.04.26 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.