1904.02.05 ஆம் நாள் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசை நாடகக் கலையில் ஸ்திரி பார்ட் (பெண்) பாத்திரமேற்று நடித்த பெண் பாத்திரங்களை உருமேற்கொள்ளும் ஆண் கலைஞரா வார். இசைக்கருவிகளான மிருதங்கம், தபேலா, வயலின், புல்லாங்குழல், ஆர்மோனியம், மோர்சிங் ஆகிய கருவிகளை இசைப்பதிலும் அவற்றினைத் திருத்துவதிலும் மிகுந்த ஆற்றலுடையவர். செட்டிவர்த்தன், வள்ளிதிருமணம், அல்லிஅர்ச்சுனா, நல்லதங்காள், அரிச்சந்திரா, நந்தனார் முதலான நாடகங்களை மேடையேற்றியவர். மதுரையைச்சேர்ந்த மிருதங்கக் கலைஞர் இரத்தினம் என்பவரிடம் மிருதங்கம் உருவாக்கும் தொழில்நுட்பங்களை தெளிவாகக் கற்றுக்கொண்டு மிருதங்க உருவாக்கத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த கலைஞன். திப்பாப்புரம் சுவாமிநாதனவர்களால் ஞானஸ்தன் எனப் பாராட்டப்பட்டவர். 1997.08.02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.