1927 ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்தவர். சிறந்த சங்கீத ஞானம் மிக்க இசை ஆசிரியராகத் திகழ்ந்தவர். வயலினையும் நன்கு வாசிக்கும் ஆற்றலுடைய இவர் கதாப்பிரசங்கியரான திருமுக கிருபானந்தவாரியாரவர்கள் ஒருமுறை யாழ்ப்பாணத் தில் கதாப்பிரசங்கம் செய்த பொழுது அவருக்கு பக்கவாத்தியமாக வயலினை ஐயா அவர்கள் வாசித்துப் பெருமை பெற்றவர். 1992 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து இறைவனடி சேர்ந்தார்.