1951.08.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். நல்லூர் பிச்சையப்பா அவர்களிடம் குருகுல வாசமாக அவரது வீட்டில் தங்கியிருந்து வயலின் கலையை நுட்பமாகக் கற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “D” GRADE சித்தி பெற்று நிலையக் கலைஞராக இசைப் பணியாற்றியவர். 1977 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை இதிகாசக்கதைகளான இராமாயணம், பாரதக்கதைகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சிகளுக்கு வயலின் பின்னணி இசைக் கலைஞராகப் பணியாற்றியவர். நல்லூர் இளங்கலைஞர் மன்றம், அண்ணாமலை மன்றம், அளவெட்டி இசைக்கலை மன்றம், கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடத்திய இசைவிழா, கம்பன் கழகம் நடத்திய இசைவேள்வி, ஆடல்வேள்வி போன்ற நிகழ்வுகளில் கலை நிகழ்வுகளில் புகழ்பூத்த கலைஞர்களது நிகழ்வுகளில் வயலின் பின்னணி இசைக்கலைஞராகப் பணியாற்றியவர். இசைஞானபூபதி என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பெற்றவர். 2011.04.25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.