யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னுமிடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர். நாதஸ்வர மேதையான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்கவகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர். பல இசைக் கலைஞர்களை உருவாக்கியவர். தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தில் தொடர்ச்சியாக இருபத்தைந்து வருடங்கள் கலைப் பணியாற்றியவர். புராண, இதிகாசக்கதைகளை இசை வாத்தியங்களில் ஆட்ட முறையினூடாக வெளிப்படுத்தி நடனமாடுகின்ற பெண் நடனக்குழுக்களையும், தவில் நாதஸ்வரக் கலைஞர்களை உள்ளடக்கிய மேளக்குழுக்களையும் வைத்திருந்து இசைக்கலை வளர்ச்சியில் வழிகாட்டுநராகப் பங்காற்றியவர். 1994 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.