1922 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாடகம், நாதஸ்வரம், வாய்ப்பாட்டு, தவில் ஆகிய கலைகளில் மிகுந்த ஆற்றலுடைய பல்துறை சார்ந்த கலைஞனாவார். இசை நாடகங்களில் நாரதராக வேடம் தரித்து சிறந்த நடிப்பாற்றலால் நாரதர் என அடைமொழியால் அழைக்கப்பட்டவர். 1959 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.