Saturday, October 5

முருகையாபிள்ளை, சீத்தாராம்

0

1911ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – மூளாய் என்னும் இடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்தவர். இவரை பெரியமுருகையா என்பர். நாதஸ்வரக் கலையில் அவருக்கு நிகர் அவரே என இசைத்துறையாளர் களால் போற்றப்பட்ட மாபெரும் நாதஸ்வர மேதையாகத் திகழ்ந்தவர். ஆரம்பகாலத்து வித்துவான் களான நவாலியூர் கோவிந்தசாமி போன்ற தலைசிறந்த வித்துவான்களில் ஒருவராக இவரும் புகழ்பெற்றவர். பல நாதஸ்வர வித்துவான்களை உருவாக்கியவர். இவரது நாதஸ்வர வாசிப்பானது ஆலயங்களின் விசேட நிகழ்வுகளுக்கும், இந்துக்களின் மங்கலச் சடங்குகளிலும் முதன்மையான இடத்தினை வகித்தமை குறிப்பிடத்தக்கது. ஸ்வரசுத்தமும், லயசுத்தமும், விவகாரமும், பிரகாசங்கதி களும் நிறைந்த சுகமுடைய வாசிப்பாகவும், கோயில் கிரியைகளிலும் சரி, இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் சரி உரிய முறைப்படி இராகங்கள் உருப்படிகளை வாசிக்கும் பழக்கமுடையவர். 1954 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நாதப்பிரம்மத்தோடு ஒன்றினார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!