1931.03.27 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மேதையான இவருடைய நாதஸ்வர வாசிப்பானது ஸ்வர சுத்தமும், இலய சுத்தமும், விவகாரமும் பிரகாசங்கதிகளும் நிறைந்த சுகமுடைய வாசிப்பாக அமைந்திருக்குமென அன்பர்களாலும், இரசிகர் களாலும் வியந்து பேசப்பட்டமை கண்கூடு. கோயில் கிரியைகளிலும் சரி, இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் சரி இராகங்களை உரிய முறைப்படி வாசிக்கும் பழக்கமுடையவர். முகவீணையி னது ஓசையினை வெளிப்படுத்தும் தன்மையினைக் கொண்ட வாசிப்புத் திறனுடையவர். இசை நாடகங்களில் வரும் கடினமான இராகங்களான பைரவி, ஹரஹரப்பிரியா, கானடா, கல்யாணி, சுபபந்துவராளி முதலான இராகங்களைப் பாடுவதிலும் வல்லவர். நல்லை ஆதீன முதலாவது குருமகா சந்நிதான மகான் மணிஐயாவினது கதாகாலாட்சேபத்திலும் இசைச் சொற்பொழிவுகளிலும் முகவீணை அணிசெய் கலைஞராகப் பங்காற்றியவர். இவரது புதல்வர்களான ரஜீந்திரன் நாதஸ் வரக்கலையிலும் மற்றவர் தவிற்கலையிலும் இன்று புகழ்பெற்று விளங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது. 2005.05.13 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.