1920 ஆம் ஆண்டு பாரதநாட்டின் சீர்காழியிலே அவதரித்தவர். சிறுவயதிலேயே இசையார்வமுடைய வராக வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகிய இசைக்கலைகளில் நன்கு தேர்ச்சியுடையவராக விளங்கினார். இவரது நாதஸ்வர இசை நுட்பத்திறனையறிந்த சித்தன்கேணியைச் சேர்ந்த தவில் வித்துவான் கோதண்டபாணி அவர்கள் ஈழத்திற்கு அழைத்து வந்து இந்து ஆலயங்களிலும், இந்துக்களின் மங்கல நிகழ்ச்சிகளுக்கும் நாதஸ்வர இசைச் சேவையைச் செய்வதற்குச் சந்தர்ப்பங்களை வழங்கினார். இக்காலத்தில் இவருக்குப் பெரும் புகழ் கிடைக்கப் பெறலாயிற்று. இவரது நாதஸ்வர வாசிப்பானது இராக ஆலாபனை விஸ்தாரமுடையதாகவும், சுகமானதாகவும், சங்கதிகள் நிறைந்ததாகவும் அமையும் என பல இசைக்கலைஞர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப் பெற்றமை கண்கூடு.
திரு.நாவுக்கரசு அவர்கள் பலகாலம் தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் சூழ்ந்த அளவெட்டி என்னும் ஊரிலேயே வசித்துவந்தார். இதனால் இவரை அளவெட்டித் திருநாவுக்கரசு என்றே அழைப்பர். இவருடன் அளவெட்டி என்.கே.பத்மநாதன் வண்ணை பி.எஸ் ஆறுமுகம்பிள்ளை, இணுவை ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோரும் பலகாலம் சேர்ந்து நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளார்கள். வித்துவான் அளவெட்டி வி.தட்சணாமூர்த்தி அவர்கள் தனது குழுவிலேயே இவரையும் சேர்த்துப் பலகாலம் மங்கள இசை நிகழ்ச்சிகளை சிறப்புற ஆற்றியமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவருடைய கால கட்டத்தில் இந்தியாவிலிருந்தும் நாதஸ்வர, தவில் கலைஞர்கள் பிரத்தியேகமாக இசை நிகழ்ச்சிகள் இங்கு பல பாகங்களிலும் நம் நாட்டு நாதஸ்வர, தவில் கலைஞர்களுடன் சேர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாகவும் இசை முன்னேற்றங்கள் ஏற்பட்டது எனலாம். இவ்வரிசையில் திருநாவுக்கரசு அவர்கள் பிரபல நாதஸ்வர வித்துவான் காரைக்குறிஞ்சி அருணாசலம்பிள்ளை அவர்களுடன் சேர்ந்தும் இசைநிகழ்ச்சிகள் பல செய்துள்ளார். இவரின் இசைச் சிறப்புக்காரணமாக யாழ்ப்பாணத்து அந்நாள் அரசாங்க அதிபர் எம்.ஸ்ரீகாந்தா அவர்கள் இவரைப் பாராட்டிக் கௌரவம் அளித்தார்கள்.
திருநாவுக்கரசு அவர்களிடம் அநேகர் வாய்ப்பாட்டு இசையினையும் பயின்றுள்ளார்கள். அவரிடம் நாதஸ்வர இசைப்பயிற்சியை அவரின் புதல்வர்களும், ஆச்சாபுரம் சின்னத்தம்பி, மூளாய் பாலகிருஷ்ணன் போன்றோர் பெற்றுள்ளனர். இவர் இளமைக் காலத்திலேயே சிறப்புப்பெற்று அமரத்துவம் அடைந்து விட்டார். எனினும் இவருடைய இசைச்சிறப்புக்களை இவருடைய இசை ஒளிப்பதிவுகள் சில இன்றும் தெரிவித்து நிற்கின்றன. இவருடைய சேவையானது இசை வளர்ச்சிக்கு அளப்பரியதாகும் என்றே கூறலாம்.
இவருடன் இணைந்து அளவெட்டி என்.கே.பத்மநாதன், வண்ணை பி.எஸ். ஆறுமுகம் பிள்ளை, இணுவில் ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் சேர்ந்து பலகாலம் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளனர். ஈழத்து தவில் வித்துவான் வி.தட்சணாமூர்த்தியவர் கள் தனது குழுவில் திருநாவுக்கரசு அவர்களை இணைத்து மங்கல இசை நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தி வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது காலத்தில் இந்தியாவிலிருந்தும் நாதஸ்வர, தவிற்கலைஞர்கள் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டு ஈழத்துக் கலைஞர்களும் இணைந்து மங்கள இசை நிகழ்ச்சிகள் பலவற்றினை அரங்கேற்றியமை குறிப்பிடத் தக்கது. இவ்வரிசையில் திருநாவுக்கரசு அவர்கள் பிரபல நாதஸ்வரவித்துவான் காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளை அவர்களுடன் இசை நிகழ்ச்சிகள் பல செய்துள்ளார். இவரது இசைச் சிறப்புக் காரணமாக அப்போதைய யாழ்ப்பாணத்து அரசாங்க அதிபர் எம்.ஸ்ரீகாந்தா அவர்கள் இவரைப் பாராட்டிக் கௌரவம் வழங்கிமையும் குறிப்பிடத்தக்கது. இக்கலைஞரிடம் அநேகமானோர் வாய்ப்பாட்டு இசையினையும் பயின்றுள்ளார்கள். இவரிடம் நாதஸ்வர இசையை அவரது புதல்வர்களும்,ஆச்சாபுரம் சின்னத்தம்பி, மூளாய் பாலகிருஸ் ணன் ஆகியோர் நன்கு பயின்று இசைச்சேவைப் புரிந்தவர்களாவர். இவராற்றிய கலைச்சேவையோடு நாதஸ்வரக் கலையையும் கற்பித்தமை என்பவற்றிற்காக தங்கப்பதக்கம், பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பெற்றவர். 1966 ஆம் ஆண்டு கலையுலக வாழ்வை நீத்து இறைவனடி சேர்ந்தார்.