யாழ்ப்பாணம்- நாச்சிமார்கோயிலடி என்னுமிடத்தில் பிறந்தவர் சிறந்த நாதஸ்வர வித்துவானான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிளிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் நாதஸ்வரம் வாசித்துப் பெருமை பெற்றவர். உரிய கௌரவத்துடனும், நாதஸ்வர சம்பிரதாயங்களைக் கையாண்டும் தனது இசை வாரிசுகளாகப் பல நாதஸ்வரக் கலைஞர் பரம்பரையினரையும் உருவாக்கியதுடன் ஸ்வரசுத்தமும், இலயசுத்தமும், விவகாரமும், பிரகாசங் கதிகளும் நிறைந்த சுகமுடைய வாசிப்பாகவும், இராகங்கள் உருப்படிகளை உரிய முறைப்படி வாசிக்கும் பழக்கமுமுடையவர். ஆரம்பகால நாதஸ்வரக் கலைஞர்களான எஸ். பீ.எம். திருநாவுக்கரசு, கே.எஸ்.இராசா , சீத்தாராம் முருகையாபிள்ளை, என்.எஸ். உருத்திராபதி போன்ற பல கலைஞர்களுடன் கச்சேரிகளில் பங்கேற்ற பெருமை பெற்றவர்.