1946.12.27 ஆம் நாள் யாழ்ப்பாணம் -பொலிகண்டி என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். 2001.11.15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.