1927.06.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரமேதையாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். சுகமும், சுருதி லயசுத்தமும் நிறைந்த சங்கதிகளை உள்ளடக்கியதாக வாசிக்கும் திறன்கொண்டவர். 1992.08.27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.