Thursday, October 10

உருத்திராபதி. என்.எஸ்.

0

1900 ஆம் ஆண்டு இலங்கைத் திருநாட்டின் வடபகுதியில் மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற மாவிட்டபுரத்தில் பிறந்தவர். தனது நான்காவது வயதில் தந்தையை யிழந்து பல்வேறு சிரமங்களின் மத்தியில் இந்தியாவின் சிதம்பரத்தைச் சேர்ந்த நாதஸ்வர வித்துவா னாகிய வைத்தியநாதன் அவர்களைக் குருவாகக்கொண்டு இரண்டு ஆண்டுகள் நாதஸ்வரக் கலையைப் பயின்றவர். பின்னர் கொத்தமங்கலம் தண்டாயுதபாணியென்னும் நாதஸ்வரக் கலை ஞனிடம் 4 ஆண்டுகள் நாதஸ்வரக் கலையைப் பயின்றவர். மிகச்சிறந்த நாதஸ்வர மேதை. தனக் கென ஒரு பாணியில் கர்த்தாராகங்களை மத்திமசுருதி பண்ணி வாசிப்பதிலும், பல்லவிஸ் வரங்களை வித்தியாசமான தாளங்களில் வாசித்து கலைஞர்களையும், பாமரமக்களையும் மகிழ்விப் பதிலும் ஆற்றல் பெற்றவர். நாதஸ்வர வித்துவானாக மட்டுமன்றி, எல்லாவகை வாத்தியங்களையும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு இசையாசிரியராகவும் பணியாற்றியவர். மாவை ஆதீனத்தில் அர்த்தசாமப் பூசையின் போதும், வெள்ளி, செவ்வாய் நாட்களிலும், நடேஸ்வராக் கல்லூரியின் சரஸ்வதி பூசையின் போதும் புல்லாங்குழல் வாசித்துள்ளார். மாவை முருகனையே தன் உயிர்மூச்சா கக் கொண்டு தன் நாதஸ்வரக் கலையை முருகனுக்கு அர்ப்பணித்து மாவை ஆதீனத்தின் ஆஸ்த்தான வித்துவானாகவும் வாழ்ந்தவர். இவரது கலைச் சேவையைப் பாராட்டி மிகச்சிறந்த வித்துவானென கலாரசிகர்கள் சார்பில் மாவையாதீன பிரதமகுரு பிரம்மஸ்ரீ துரைச்சாமிக் குருக்கள் அவர்களால் தங்க நாதஸ்வரம் பரிசாக வழங்கப் பட்டமையும், அனேக ரசிகர்களால் தங்கப் பதக்கங்கள் வழங்கியும் கௌரவிக்கப் பெற்றவர். அகில இலங்கை அரசினர் இசையாசிரியர் சங்கத்தின் சார்பாக 1964 ஆம் ஆண்டு சங்கீத வித்துவபூஷணம் என்ற விருதும், அகில இலங்கை சங்கீத வித்துவ சபையினால் 1965 ஆம் ஆண்டு பொன்னாடை போர்த்தியதுடன் சங்கீத வித்துவமணி என்ற விருதும் யாழ். நகரில் நடந்த இசைவிழாவின் போது இராமநாதன் இசைக்கலைப் பேராசிரியராக இருந்த சித்தூர் சுப்பிரமணியபிள்ளை அவர்களால் பொன்னாடை போர்த்திப் பாராட்டப்பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட மாணவர்களில்பலர் பிரபல நாதஸ்வர வித்துவான்களாகவும், இசையாசிரி யர்களாகவும், பாடகர்களாகவும், இசை ஆராய்ச்சி அறிஞர்களாகவும் இன்று திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 1980.05.24 ஆம் நாள் தனது கலையுலக வாழ்வை நீத்து இறைவனடி சேர்ந்தார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!