1930.03.10 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூர் என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த நாதஸ்வர மேதையான இவர் செல்வச்சந்நிதி முருகன் ஆலய ஆஸ்த்தான வித்துவானாகப் பலகாலம் நாதஸ்வரக் கலைப் பணியாற்றியவர். இசைக்குயில், இசைஞானி, நாதஸ்வரக்கலாநிதி, இசைஞானவாருதி,கலைமாமணி போன்ற பட்டங்கள் வழங்கி இவரைக் கௌரவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. 2001.03.25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நாதப்பிரம்மத்தோடு ஒன்றினார்.