Saturday, October 5

இராசா, கே.எஸ்

0

யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை மாவிட்டபுரம் என்னுமிடத்தில் 1907.02.10 ஆம் நாள் பிறந்தவர். மூத்த நாதஸ்வர மேதையான இவர் நாதஸ்வரக்கலையை தனது உறவினரும் தேவஸ்தான வித்துவானு மாகிய குழந்தைவேலு என்பவரிடம் கற்றவர். மாவையாதீன சேவை மட்டுமல்லாது, ஈழத்து ஆலயங்களின் விசேட நிகழ்வுகளுக்கும், இந்துக்களின் மங்கலச் சடங்குகளுக்கும் மங்கல இசையை வழங்கியுள்ளார். ஸ்வரசுத்தமும், இலயசுத்தமும், விவகாரமும், பிரகாசங்க திகளும் நிறைந்த சுகமுடைய வாசிப்பாகவும் கோயில் கிரியைகளிலும்சரி, இந்துக்களின் மங்கல வைபவங்களிலும் சரி உரிய முறைப்படி இராகங்கள் உருப்படிகளை வாசிக்கும் பழக்கமுடையவர். மாவைக் கந்தன் வீதியிலே அமைந்திருந்த தனது வாசஸ்தலத்திலே இருந்தவாறு நாதஸ்வரத்திற்குச் சிறப்பான பல கலைஞர்களை உருவாக்கிய பெருமையுடையவர். அந்தவகையில் மாவிட்டபுரம் சண்முகநாதன், அளவெட்டி சிதம்பரநாதன், இணுவில் சுந்தரமூர்த்தி கோண்டாவில் கானமூர்த்தி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஈழநாட்டின் பல ஊர்களிலும், பிரபல்யமான ஆலயங்களிலும் கானமழை பொழிந்ததுடன் எஸ்.பீ.எம். திருநாவுக்கரசு, ஆச்சாபுரம் சின்னத்தம்பி, மாவிட்டபுரம் எம்.எஸ்.சண்முகநாதன், திருப்பங்கூர் இராமையா,கலாசூரி என்.கே.பத்மநாதன் போன்ற நாதஸ்வரக் கலைஞர்கள் இவருடன் இணைந்து வாசித்து வந்துள்ளனர். நாதஸ்வர இசை மேதையான ராசா அவர்கள்  அவர்கள் சிறந்தமுறையில் உரிய கௌரவத்துடனும், நாதஸ்வர சம்பிரதாயங் களைக் கையாண்டும் தனது இசைவாரிசுகளாகப் பல நாதஸ்வரக்கலைஞர் பரம்பரை யினரையும் உருவாக்கியதுடன் பல்லாண்டுகாலம் இசைச்சேவை புரிந்து நாதஸ்வர இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் மாவிட்டபுரம் என்பதனை நிரூபணம் செய்யும் வகையில் வாழ்ந்தவர். 1994.01.01 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து மாவைக்கந்தன் திருவடியில் சரண்புகுந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!