1927-01-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். ஓவிய, சிற்ப, நாடகக்கலைஞனாகத் திகழ்ந்தாலும் ஓவியக்கலையில் அதிகளவில் பிரகாசித்த வர். இலங்கைப் பாடநூல் வெளியீட்டுத்திணைக்களத்தில் பாடங்களைப் புலப்படுத்தும் ஓவியங்களை வரையும் ஓவியராகவும் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தின் சித்திரமும் வடிவமைப்பும் கற்கைநெறியின் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இவருடைய கலைச்சிறப்பினை வடமாகாண கௌரவ ஆளுநர் விருது வழங்கியும், கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது வழங்கியும் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.