1911.07.22 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் பலரை உருவாக்கி இக்கலையில் மேதையாகத் திகழ்ந்தவர். இவருடைய தவில் வாசிப்பானது ஸ்வர,லய சுத்தமும் விவகாரமும், பிரகாசங்கதிகளும் நிறைந்தனவாகக் காணப்படும் என ரசிகர்களால் குறிப்பிடப்பட்டமை கவனிக்கத்தக்து. ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் தவில் வாசித்துப் பெருமை பெற்றவர்.1979.12.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்துநிலையுலகம் சென்றார்.