1948.12.26 ஆம் நாள் யாழ்ப்பாணம் -நல்லூர் என்னும் இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த நடிகனான இவர் பல்வேறு பாத்திரங்களையும் நடித்துப்புகழ் பெற்றதுடன் குணச்சித்திரப் பாத்திரங்களை மிகவும் சிறப்பான முறையில் நடிக்கும் ஆற்றல் பெற்றவர். வீ.ரி.ஏ.விஸ்வா என அன்பர்களால் அழைக்கப் பட்டவர். 2003.04.27 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.