1937.10.02 ஆம் நாள் யாழ்ப்பாணம் -தெல்லிப்பளை 10 ஆம் கட்டை மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்தவர். சிறுபராயத்திலிருந்து நடிப்புத்துறையில் தன்னை அர்ப்பணித்து வந்தவர். நாடகத்துறை மட்டுமன்றி இசை, சொல்லாடல், கிராமியக்கலை, வில்லுப்பாட்டு போன்ற துறைகளிலும் தனது ஆற்றலை வெளிக்கொணர்ந்தவர். மாவை முத்தமிழ் கலாமன்றத்தின் முக்கியமான பல பொறுப்புக் களை வகித்ததோடு நாடக ஆற்றுகைகளிலும் மாவை மத்திய சனசமூகநிலையத்தில் முக்கிய பொறுப்புக்களை வகித்தது மட்டுமல்லாமல் அம்மன்றத்துப் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியாக நாடகப் பயிற்சிகளையும் அது தொடர்பான அறிவினையும் ஊட்டிய நாடகப்புலமையாளர். மகுடபங்கம், ஏனிந்த அவலம், எமலோகத்தில் ஸ்ரைக் என்பன இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவை கலைச்சுடர் விருதினை வழங்கிப் பாராட்டியமை குறிப்பிடத் தக்கது. 2007.05.28 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.