1942-04-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மயிலிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். இந்து ஆலயங்களுக்கான மரத்தினாலான வாகனங்கள் வடிவமைப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்ற இவர் மயிலிட்டியில் ஸ்ரீமுருகன் கனகசிற்பாலயம் என்ற நிறுவனத்தினை நடத்தி நாய், எலி,அன்னப்பட்சி, குதிரை போன்ற பல்வேறு வாகனங்களை வடிவமைத்து இந்துசமயப்பண்பாட்டில் நீங்காத இடத்தினைப் பெற்றவர். மயிலிட்டி சங்குவத்தைப் பிள்ளையாராலயம், தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயம், 1980இல் மயிலிட்டி முனையன்வளவுப் பிள்ளையாராலய சித்திரத்தேர், 1984இல் கரவெட்டி தச்சன்தோப்பு பிள்ளையாராலயப் பெருமஞ்சம் போன்ற பல்வேறு ஆலயங்களின் தேர். வாகனம், மஞ்சம் ஆகியனவற்றினை வடிவமைத்தவர். சிற்பவாரிதி, சிற்பசாகரம், கலைஞர் திலகம் ஆகிய விருதுகள் வழங்கப்பெற்றவர். 2004-04-12 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.