1929-06-17 ஆம் நாள் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வீமன்காமம் என்னும் இடத்தில் பிறந்த இவர் N~க்ஸ்பியரின் நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து அரங்கேற்றியவர். இவரை எல்லோரும் ஒதெல்லோ சோமர் என அழைப்பது வழக்கம். ஆங்கில நாடக இயக்குநராகவும், நடனநாடக ஆசிரியராகவும் , இயக்குநராகவும் தமிழ் நாடக வரலாற்றில் இவர் ஆற்றிய பங்களிப்பு முக்கியத்துவமுடையது. நாடகத்துறையில் சாதனைகள் பலபுரிந்து தனது ஆற்றல்களைக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியகலாசாலைப் பயிலுனர் ஆசிரியர்கள் மற்றும் நாடக மன்ற உறுப்பினர்கள் எனப்பலதரப்பினருக்கும் தளரா மனத்துடன் ஊட்டி உவகை பெற்ற படைப்பாளன். கல்லூரி ஆசிரியராக,கலாசாலை ஆங்கில விரிவுரையாளனாக, கல்வியதிகாரியாகப் பணியாற்றியவர். 2006-08-25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.