1934.09.29 ஆம் நாள் யாழ்ப்பாணம் சீரணி, சண்டிலிப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். பார்சி அரங்க முறையிலமைந்த நாடகத்தில் ஒப்பாரும் மிக்காரும் போற்றத்தக்க வகையில் தன்னை வெளிப்படுத்திய சாதனையாளன்.நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நீண்ட காலக்கலைத் தொடர்ச்சியுடைய இவர் அல்லி அருச்சுனா, சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம், பூதத்தம்பி, ஞானசௌந்தரி, கோவலன் கண்ணகி, பவளக்கொடி, மார்க்கண்டேயர், அரிச்சந்திர மயானகாண்டம் போன்ற பல இசை நாடகங்களில் முக்கிய பாத்திரங்களேற்று நடித்தவர்.பிற்காலத்தில் தனது இரண்டு கண்களினதும் பார்வையையிழந்த போதிலும் பார்சி முறையிலமைந்த பாடல்களை இளந்தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்த பெருமையுடையவர். இவருடைய கலைச் சேவையினைப் பாராட்டி இசைநடிகமணி, இசைநாடக அரசு, நடிக கலாமணி, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் போன்ற விருதுகள் வழங்கப்பெற்றவர். 2004-11-07ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.