Sunday, October 6

செல்வரத்தினம், வடிவேலு

0

1947-01-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை என்ற இடத்தில் பிறந்தவர்.பார்சி அரங்க முறையி லான அரங்க வெளிப்பாடுடைய இவர் நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நீண்ட காலக்கலைத் தொடர்ச்சியுடையவர். அல்லி அருச்சுனா, சத்தியவான்சாவித்திரியில் சாவித்திரி, வள்ளி திருமணத்தில் வள்ளி,பூதத்தம்பி, ஞானசௌந்தரி, கோவலன் கண்ணகி, பவளக்கொடி, மார்க்கண்டேயர், அரிச்சந்திர மயான காண்டத்தில் சந்திரமதி போன்ற ஸ்திரிபார்ட் (பெண்) பாத்திரங்களேற்று பார்சிவழி நாடகங்களில் நடித்தவர். பலர் பெண் வேடம் தாங்கி நடித்த போதிலும் இவருடைய நடிப்பால் பெண்பாத்திரங்களை ஆண்கள் ஏற்று இலகுவாக நடிக்கமுடியும் எனக்காட்டி யவர். மிகுந்த சிரத்தையுடன் பயிற்சி பெற்று இக்கலைத்துறையில் நீண்டகாலம் தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தினையும், விமர்சகர்களையும் ஏற்படுத்தி வைத்திருந்த மாபெரும் கலைஞனாவார் .கலைஞானச்சுடர், நாதமணி,கவிக்குயில்,கலைமாமணி போன்ற பட்டங்கள் வழங்கப் பெற்றுப் பாராட்டப்பெற்றவர். 2006-12-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!