Friday, February 14

செல்வமணி, வேலு

0

1935-08-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பலாலி கொத்தியால்; கொக்கணைவளவு, கே.கே.எஸ். போஸ்ற் என்னும் இடத்தில் பிறந்த இவர் சிறந்த கிராமிய மற்றும் இசைநாடகக் கலைஞரும், காதத்வராயன சிந்து நடைக்கூத்தின் அண்ணாவியாரு மாவார.; தனது மாமனாரான எஸ்.மயில்வாகனம் அவர்களால் உருவாக்கப்பட்ட வடமயிலை கலைமகள் நாடக மன்றத்தின் மூலம் வசாவிளான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்னால் அமைந்திருந்த வாசிகசாலையில் மனோன்மணி என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் நாடக உலகில் பிரவேசித்தவர். பின்னாளில் பல பாரம்பரியக்கலைகளை அரங்கேற்றியவர். காத்தவராயன், கதை வசன நாடகங்களான பண்டாரவன்னியன், மலர்புரியின் மணிமுடி, மலைக் கோட்டை மன்னன் முதலிய சரித்திர நாடகங்களையும் அரங்கேற்றியவர். காத்தவராயன் கூத்தில் அம்மனாகவும், பக்தநந்தனாரில் ஐயராகவும் நடித்த பாத்திரங்கள் இவருக்குப் புகழைத்தேடிக் கொடுத்தன. மட்டக்களப்பைச் சேர்ந்த அகம்மது அலியாசு என்பவரைக் குருவாகக் கொண்டு சிலம்பு விளையாட்டையும் கற்றுக்கொண்டவர். மேலும் உடுக்கு, கரகம், காவடி ஆகிய கலைகளையும் பயின்றவர். இடம்பெயர்ந்து வாழ்ந்தபோதிலும் தனது கலையை அழியவிடாது இறக்கும் வரை பேணிப்பாதுகாத்ததுடன் ஏனையவர்களுக்கும் பயிற்றுவித்து பாரம்பரியக் கலைகளின் தொடர்ச்சிக்கு வழியமைத்த பெருமைக்குரியவர். இரவு காத்தவராயன் கூத்தினை ஆடிவிட்டு விடிய நித்திரைக்குச் சென்றவர்தான். அப்படியே கலைக்குள் சங்கமித்து விட்டார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!