1916-07-22 ஆம் நாள் யாழ்ப்பாணம் தீபகற்பம் வேலணை என்னுமிடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்தவர். இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகவும், இசைக்கலைஞராகவும் பணியாற்றியவர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைமேதை சபேஸ்ஐயரிடம் இசையின் நுட்பங் களைக் கற்று சங்கீதபூ~ணம் பட்டம் பெற்றவர். இசைமேதைகளான சீனிவாச ஐயங்கார், மகாராஜபுரம் ஐயங்கார் ஆகியவர்களது ஆசியினையும் பெற்றவர். இவருடைய கலைத்திறமைக்காக இலங்கை அரசின் கலாபூஷணம், இசையரசு போன்ற பட்டங்கள் வழங்கப்பெற்றவர்.2002-03-15 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.