1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் -உடுவிலில் பிறந்தவர். மாணவப் பருவத்தில் இந்திய திருச்சி வானொலியில் முழுநேரக் கச்சேரியினை நடத்தியவர். இலங்கை வானொலியில் அதியுயர் சிறப்புக் கலைஞனாக இசைத்துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். நாதம் என்னும் இசைமஞ்சரி சஞ்சிகையினை வெளியிட்டு வந்தவர். இத்துறைக்காக ஏழிசைக்குரிசில் என்ற பட்டம் வழங்கப் பெற்றவர்.1987ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.