1939-02-16 ஆம் நாள் யாழ்ப்பாணம் -காரைநகர் என்ற இடத்தில் பிறந்து ஆனைக்கோட்டையில் வாழ்ந்தவர். நாச்சார் வீட்டுக்கட்டட மரபில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்த மரயன்னல்கள், கதவுகள், அலுமாரிகள் இன்னும் பிற மரத்தளபாடங்களை கலை நுட்பம்மிக்க சித்திரவேலைப் பாடுடையதாக வடிவமைப்பதிலும் மாட்டு வண்டிலுக்கான சக்கரங்களை வடிவமைப்பதிலும் நிபுணத்துவம் மிக்கவராக விளங்கினார். இவருடைய கலைத்திறனைப் பாராட்டி காரைநகர் கலாசாரப் பேரவையினரால் “சிற்பசித்திரசிம்ம” என்ற விருதினை வழங்கிப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது. 2007-09-17 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்