Tuesday, March 18

கிருஸ்னாழ்வார், எம்.வீ.

0

வீரகத்தி ஆழ்வார் என்னும் பெயருடைய இவர் 1895 ஆம் ஆண்டு வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.அண்ணாவியார் அமரர் ஆறுமுகம் அவர்களிடம் இக்கலையினை நன்கு கற்றவர். ஈழத்துச் சங்கரதாஸர் என அழைக்கப்பட்ட இவர் சங்கரதாஸ சுவாமிகளால் அரங்கேற்றப்பட்ட பார்சி முறையிலமைந்த நாடகங்களைப் பின்பற்றி ஈழத்திலும் பல நாடகங்களை அரங்கேற்றினார். இந்தியக் கலைஞர்கள் பலருடன் இணைந்து நடித்தவர். கூடுதலாக ஸ்திரிபார்ட் (பெண்) பாத்திரங்களையேற்று நடித்தவர். இவரால் நடித்த பாத்திரங்களில் சுபத்திரை என்ற பாத்திரம் பெரும் புகழைப்பெற்றுக் கொடுத்தது. இதனால் சுபத்திரை ஆழ்வார் என அழைக்கப்படலானார். அமரர் பண்டிதர் மயில்வா கனம் அவர்களிடம் யாப்பு இலக்கணத்தினை முறையாகக் கற்று கவிபுனையும் ஆற்றலையும் பெற்றார். 5000த்திற்கு மேற்பட்ட கையறு நிலைப்பாடல்களைப் பாடியவர். 1972 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!