Saturday, March 15

அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (கலாபூஷணம்)

0

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் கரவெட்டியைச் சேர்ந்த யோக்கீம் சுவானப்பிள்ளை தம்பதியினருக்கு மூத்த மகளாக 1926.12.26 ஆம் நாள் பிறந்தவர். தனது கல்வியை மலேசியாவிலும், கரவெட்டி திருஇருதயக்கல்லூரியிலும் மேற்கொண்டார். கரவெட்டி நாதஸ்வர வித்துவான் பெரியசாமிப்பிள்ளையிடம் சங்கீதத்தையும், ஆர்மோனியத்தையும் கற்றுக் கொண்டவர். பின்1947-1948 காலப்பகுதியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சங்கீதத்தை ஒரு பாடமாகக்கற்று சித்தியடைந்தார். 1956-1960 களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வடமராட்சியின் முதல் சங்கீதபூஷணமானார். இங்கு ஈழ மாணவர்மன்ற துணைத் தலைவராகத் தெரிவாகியதுடன், சமூகசேவை மன்றத்திலும் இணைந்து சமூகப்பணியாற்றினார். இவர் ஹார்மோனியத்தை சிறப்புப் பாடமாகக் கற்றபொழுதும் வீணை, வயலின் என்பவற்றையும் இசைக்கும் ஆற்றல்மிக்கவர். நாடகம், நாட்டுக்கூத்து என்பவற்றிலும் ஆர்வம் உடையவர்.1960களில் யாழ் நாடகக் கலாமன்றத்தின் போஷகராகவும் பணியாற்றியவர். இலங்கை அரசின் கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது வழங்கப்பெற்றவர். 2003.03.02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!