Thursday, May 30

செல்லையா உதயசந்திரன்

0

கலை பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்திலே 02.01.1958ஆம்  ஆண்டு “சீன்காரச்” செல்லையா என்பவருக்கு உதயசந்திரன் மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் யாழ்ப்பாணத்திற்கு முதன்முதலாக ஒலிபெருக்கி சாதனத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமையைக் கொண்டவர். இவர் இந்தியாவிலிருந்து “சீன்” மற்றும் நாடகத்திற்குரிய உடுப்புகள் ஒப்பனைப் பொருள்களை கொண்டுவந்து பல நாடகங்களை நடத்தி வந்தார். அந்தக் காலத்தில் பிரபல்யமாய் இருந்த இந்திய திரைப்பட நடிகர்களை குழுவாக அழைத்துவந்தும் (உூ ம் வு.ளு துரைராஜா) பல நாடகங்களை நடத்தியிருந்தார்.

தந்தையார் “கால்பெட்டி” என்று அழைக்கப்படும் காலாலும் வாசிக்கப்படும் ஆர்மோணியத்தை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் பெண் வேடமிட்டு (மாதவி, வள்ளி) நடித்தும் இருக்கின்றார். யாழ்ப்பாணத்தின் பிரபல இசை நாடகக்கலைஞர்களை உருவாக்கியவராகவும் இருந்துள்ளார்.

இவரது தமையன் திரு. தங்கவேல் அவர்கள் VK ஆறுமுகம் ஆசிரியருடன் சேர்ந்து வில்லிசையில் கடம் வாசிக்கத் தொடங்கி பின் கலாவினோதன் சின்னமணியோடு நீண்ட காலமாக பணியாற்றி 1974 ஆம்  ஆண்டு சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று கலைப் பயணத்தை தொடர்ந்தார்.

இவரது மகள் முறையாகப் பயின்று வயலின் கலைஞராக  விளங்குகின்றார்;.

இவர் சிறுவயது முதல் மேடைக்கு உள்ளே நின்று கூத்துக்களைப் பார்த்ததாலும் இயற்கையிலேயே தன்னுள் ஆர்வம் இருந்ததாலும் பாடசாலை நாடகங்களில் 1970ம் ஆண்டுகளிலேயே நடிக்கத்தொடங்கினார். பின்பு 1975ஆம் ஆண்டு இவரது பாடசாலை நாடகங்களை பார்த்த வண்ணைக் கலைவாணர் நாடகமன்றத்தினர் தங்களுடைய “வீரமைந்தன்” எனும் நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு ஆலோசனைகள் வழங்கி அவரை நடிக்க வைத்து பெரும் புகழையும் பெற்றுக்கொடுத்தார்கள். இங்கே இவருக்கு குருவாக இருந்தவர் ST அரசு அவர்கள். பின்னர் அதே ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேறிய தமிழரசு மாநாட்டிலே இதே நாடகம் அரங்கேற்றப்பட்டு பல அரசியல் தலைவர்களின்; அபிமானத்தைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் 1976ம் ஆண்டு கலைவாணர் நாடக மன்றத்தினரால் வீரசிங்கம் மண்டபத்தில் ஆற்றுகை செய்யப்பட்ட “சரியா தப்பா” என்ற நாடகத்திலும் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தார். இதே காலப்பகுதியில் திரு. கணேசசுந்தரம் அவர்களோடு வில்லிசையிலும் கலந்து கொண்டார். மேலும் ஈழத்தின் முதல் சினிமாஸ்கோப் படமான “தெய்வம் தந்த வீடு” என்ற படத்தில் சிறிய வேடமேற்றார்.

தொல்புரம் கலாலயம் நாடக மன்றத்தில் இணைந்து இவரது அத்தான் திரு முருகையா ஆசிரியரிடம் இசை நாடக நுணுக்கங்களை கற்று 1977ஆம் இ1978ஆம் ஆண்டுகளில் முறையே குந்தியின் செல்வன் குசேலர் ருக்மணி கல்யாணம் போன்ற இசைநாடகங்களில் உபபாத்திரங்களில் நடித்து இசைத்துறையில் அனுபவத்தைப் பெற்றார்.

1982ம் ஆண்டு வேலை நிமிர்த்தம் காரணமாக கத்தார் நாட்டிற்குச் சென்றார். அங்கும் இவரது கலைப்பணி தொடர்ந்தது. அங்கு தமிழர்களின் பொங்கல் விழாவிலே வள்ளி வில்லிசையையும் இ சாம்பிறாட் அசோகன் நாடகத்தையும் நடித்து கத்தார் சகாப்தத்தில் புதுமையை உண்டாக்கினார்.

அதன்பின்னர் தென் இந்தியக்கலைஞர்களை சேர்த்து திருவிளையாடல் நாடகத்தை நடித்தார்.

தென் இந்தியக்கலைஞர்களை வைத்து கண்ணகி வில்லிசை நடத்தினார். தென் இந்தியக்கலைஞர்களுக்கு பஸ்மாசுர வதம் என்ற நாடகத்தை எழுதி ஆடைகள் வடிவமைத்து மேடையேற்றினார். வட இந்திய பாடகர்களுக்கு தபேலா வாசிக்கின்ற சந்தர்ப்பங்களும் இவருக்கு கிடைத்தது. குறிப்பாக பின்னணிப்பாடகி P.சுசீலா அம்மாவிற்கு பஜனைக்கு தபேலா வாசிக்கின்ற பாக்கியமும் இவருக்கு கிடைத்தது. பின்னர் டீயஉம வழ ளுஉhழழட என்னும் நகைச்சுவை நாடகத்தை குழந்தைகளுக்காக அவர்களுடன் சேர்ந்து நடித்தார். மேலும் தென் இந்தியக்கலைஞர்களை வைத்து “அவள்” என்னும் குறும்படத்தை தயாரித்து நடித்து இயக்கி ஒளிப்பதிவையும் இவரே ஏற்றுக்கொண்டார்.

2010ம் ஆண்டு திரும்பவும் ஊருக்கு வந்து போர்ச்சூழல் காரணமாக முடங்கிப்போயிருந்த கலாலயம் நாடக மன்றத்தை உயிர்ப்பித்து அம்மன்றத்தின் தலைவராகவும் கதாசிரியராகவும் பிரதம நடிகராகவும் இயக்குனராகவும் இன்று வரை தொடர்ந்து பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவிலில் வருடம் தவறாமல் புதிய புதிய இசை நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். முக்கியமாக இவரது நாடகங்களில் சிறுவர்களையும் இளம் பெண் பிள்ளைகளையும் இணைத்து 06 வயது தொடக்கம் 74 வயது வரையிலும் உள்ள அங்கத்தவர்களை பங்கு பெறச் செய்கின்றார்.

அந்த வரிசையில்

குந்தியின் செல்வன் 2011

இரணியின் செல்வன்      2012

தசரதன் செல்வன்    2013

நரகாசுரன்           2014

கம்சன்         2015

லங்கா தகனம் 2016 (2017 வழக்கம்பரை அம்மன் கோவில்)

அபிமன்யு      2017 (2018 நல்லூர் துர்க்காதேவி அரங்கு மற்றும் மூளாய் ஜெகஜோதி அம்மன் ஆலயம்)

கண்ணனும் கள்வனும் 2018

தேவகி மைந்தன்     2019

மற்றும் 10.11.2019 அன்று “சிவபூமி” முதியோர் இல்லத்தில் தேவகி மைந்தன் நாடகத்தை இலவசமாக ஆற்றுகை செய்தார். 2019ம் ஆண்டு நவராத்திரி விழாவிற்கு தொல்புரம் சனசமூக நிலையத்திலும் பின்னர் 22.11.2019 அன்று பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாச்சாரப் பெருவிழாவிலும் “தாயைக்கண்ட சேய்” (கர்ணன்) என்ற நாடகத்தை ஆற்றுகை செய்தார். பின்னர் இதே நாடகத்தை 2020ம் ஆண்டு வடலியடைப்பு கலைவாணி கலாமன்றத்திலும் ஆற்றுகை செய்தார். இத்தனை நாடகங்களையும் இவரே எழுதி முக்கிய பாத்திரம் ஏற்று நடித்து நெறியாழ்கை செய்திருக்கின்றார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது (09) நாடகங்களையும் இறுவட்டுகளாக்கி வெளியீடு செய்து ஆவணப்படுத்தியிருக்கின்றார்.

இவற்றை விட யமதர்மன் தீர்ப்பு (இந்த நாடகம் பல மேடைகளைக் கண்டது)இ இதுதான் தீர்ப்பா?இ தன்வினைஇ தடுமாற்றம் இ ஹலோ டொக்டர் போன்ற சமூக நாடகங்களையும் எழுதி ஆற்றுகை செய்து இவராலான தொண்டை கலைக்கு ஆற்றி வருகின்றார்.

பெற்றுக்கொண்ட விருதுகள்

கலைஞானி     (2013 ஹேமலதா செல்வராஜா சிறுவர் ஞாபகார்த்த நிதியம்)

கலைஞாயிறு   (2014 பிரதேச செயலகம்இ சண்டிலிப்பாய்)

கலைவாருதி    (2015 பிரதேச செயலகம்இ சங்கானை)

அண்ணாவியார்; (கலாலயம் நாடக மன்றம்)

திரைப்படம். குறும்படம் மற்றும் விளம்பரப்படம்

குறும்படம் :- “அவள்” என்ற குறும்படத்தை இந்தியக்கலைஞர்களை நடிக்க வைத்து ஒளிப்பதிவு. ஒலிப்பதிவு. ஆற்றுகையும் செய்தார்.

“சீட்டு”. “கொடூரன்” “மத்தியசிறைச்சாலை”. AAA Movies 48 மணித்தியாலப்போட்டிப் படத்திற்காக “வேண்டப்படாத காதல்”. Dan TV இன் 48 மணித்தியாலப்போட்டிப் படத்திற்காக “பத்து ரூபாய்” திரைப்படம் :- தெய்வம் தந்த வீடு (1978).மனதுக்குள் ஒரு மழைச்சாரல் (2015).  சண்டியன் (2015)

விளம்பரப்படம் :-

சிங்கள மொழியில் ஜாதிக சம்பத அதிஸ்ரலாபச்சீட்டுக்கானது. மற்றும் IBC தொலைக்காட்சிக்காகவும் . ஆற்றுகை செய்திருந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!