1921.02.02 ஆம் நாள் யாழ்ப்பாணம்- இணுவில் என்னும் இடத்தில் பிறந்தவர். பாரம்பரியக் கலைவடிவங்களில் ஒன்றான பார்சிவழி அரங்க முறையின் ஆர்மோனிய இசைக் கலைஞன். நடிகமணி வீ.வீ.வைரமுத்துவினது அரங்கிலும் இன்னும் பலரது அரங்கிலும் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்ட அத்தனை பார்சிவழி அரங்கின் பின்னணி இசையில் ஆர்மோனிய வித்துவானாக பெரும் பங்காற்றியவர். பார்சி அரங்கு மட்டுமன்றி , காத்தவராயன் கூத்துக் கலையிலும் ஆர்மோனிய வித்துவானாகவும் பங்காற்றியதுடன், இசைநாடக நடிகனாகவும் விளங்கிய இவரது இசை வித்துவத்தினைக் கௌரவிக்கும் நோக்கில் கலைஞானச்சுடர் என்ற விருது வழங்கப்பெற்றவர்.2002.03.25 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.